வயதாகிவிட்டதைப் போல உணர்கிறேன்… சாதனைப் போட்டிக்கு பின் தோனி பதில்!
சென்னை அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் தோனி மிகவும் வயதாகிவிட்டதை போல உணர்வதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கென்று தனியாக ரசிகர் கூட்டம் இந்தியா முழுவதும் உண்டு. அந்த அணியின் கேப்டன் தோனி சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடி மைல்கல் சாதனையை நேற்று எட்டினார். இடையில் இரண்டு ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்ட போது அவர் புனே அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மைல்கல் போட்டிக்கு பின்னர் பேசிய தோனி மிக நீண்ட காலமாகி வயதாகிவிட்டதைப் போல உணர்கிறேன். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் விளையாடி 200 ஆவது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.