ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 மார்ச் 2023 (08:35 IST)

கோலி சொன்னதால்தான் நான் அதை செய்தேன்… சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கக் காரரான சேவாக், மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற சில ஆண்டுகளில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பத்தினார். ஆனால் அவருக்குப் பதிலாக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தது சம்மந்தமாக பேசியுள்ள சேவாக் “விராட் கோலியும், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரியும் என்னை அணுகாமல் இருந்திருந்தால் நான் விண்ணப்பித்திருக்க மாட்டேன். 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு கும்ப்ளேவின் ஒப்பந்தம் முடிவடையும் என்றும், அதன் பிறகு நீங்கள் அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் செல்லலாம் என்றும் அவர் என்னிடம் கூறினார்.” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் கோலி சேவாக், பயிற்சியாளராக வருவதை விரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.