திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

“என் எண்ணங்களைக் கோலி அன்று பொய்யாக்கினார்…” சேவாக் புகழாரம்!

கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய திறமைக்கு ஏற்றவாறு விளையாட முடியாமல் தடுமாறிய கோலி, மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு வந்துள்ளார். சமீபத்தில் ஆஸி அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய கோலியை பயிற்சியாளர் டிராவிட் பாராட்டி இருக்கிறார். அவரது பேச்சில் “அணிக்கு என்ன தேவையோ அதை மனதில் வைத்து விளையாடுபவரே சிறந்த டீம் ப்ளேயர். எனக்கு தெரிந்து கோலி, மிகச்சிறந்த சிக்ஸ் அடிக்கும் வீரர். ஆனால் அவர் இறங்கி அடிக்காமல், நிதானமாக விளையாட ஆரம்பித்தார். அவரின் இந்த பண்புதான் அவரை சாம்பியன் வீரராக ஆக்குகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியை சிறப்பாக விளையாடி கோலி வெற்றி பெற்றுத்தந்தார்.  அந்த போட்டியில் அவர் மலிங்காவை எதிர்கொண்டது பிரமிக்க வைத்த ஒன்று. நான் அவர் மீது வைத்திருந்த பிம்பத்தை பொய்யாக்கினார். அவர் சேர்த்திருக்கும் ரன்கள் அசாத்தியமானது” எனக் கூறியுள்ளார்.