வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified சனி, 18 மார்ச் 2023 (18:23 IST)

கோலி பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுகிறேன்…பிரபல் நடிகர் ஆசை!

இந்திய சினிமாவில் விளையாட்டில் சாதித்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியவர்களின் பயோபிக்குகள் இப்போது அதிகமாக உருவாகின்றன. அந்தவகையில் நடிகை டாப்ஸி தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படமான சம்பாது மித்து என்ற படத்தில் நடிக்க சம்மதித்தார்.

இந்நிலையில் இப்போது RRR படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ள ராம்சரண் தேஜா, கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். மேலும் “நான் பார்ப்பதற்குக் கோலி போலவே இருப்பதால் அவர் பயோபிக்கில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் சிறப்பாக இருக்கும். விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை” எனக் கூறியுள்ளார்.