வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 மே 2024 (07:55 IST)

கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது… ப்ளே ஆஃப் சென்றது குறித்து கோலி நெகிழ்ச்சி!

நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருந்த ஆர் சி பி, அதன் பின்னர் மீண்டெழுந்த ஆர் சி பி அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த மீட்சிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரரான கோலியும் ஒரு முக்கியக் காரணம். அவர் இந்த சீசனில் மட்டும் 700 ரன்களுக்கு மேல் சேர்த்து அந்த அணியை அனைத்துப் போட்டிகளிலும் தோளில் தாங்கி வழிநடத்தினார்.

ப்ளே ஆஃப் சென்றது குறித்து பேசியுள்ள அவர் “கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது. நீங்கள் உண்மையாக உழைக்கும்போது அதற்கான பலன் கிடைக்கும். நாங்க்ள் நேர்மையான கடின உழைப்பை செலுத்தினோம். பலன் கிடைத்துள்ளது. இப்போதைக்கு நான் வேறு எதுவும் கூற விரும்பவில்லை. அடுத்த  போட்டியில் கவனம் செலுத்த உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.