1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (10:21 IST)

சிஎஸ்கே ஜெயிக்கணும்.. விராட் கோலி செய்த ரகசிய வேலை!

Kohli Dhoni
நேற்று நடந்த சென்னை – கொல்கத்தா அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வென்று தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 235 ரன்களை குவித்த நிலையில் அதி சேஸ் செய்ய முடியாத கொல்கத்தா அணி 186 ரன்களில் சென்னையிடம் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதல் இடத்தை அடைந்துள்ளது. பாயிண்ட்ஸ் கணக்கில் 10 பாயிண்ட்கள் சிஎஸ்கே வசம் இருந்தாலும், ரன்ரேட்டில் சிஎஸ்கேவை விட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிக பாயிண்ட்கள் உள்ளது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் – ஆர்சிபி இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதல் இடத்திலேயே இருந்திருக்கும்.

ஆனால் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி ராஜஸ்தானை வீழ்த்தியதால் ராஜஸ்தான் அணி பாயிண்ட் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதன் மூலம் விராட் கோலி தனது ஆதர்சமான தோனியின் சிஎஸ்கே அணி முதல் இடம் பிடிக்க மறைமுகமாக உதவியுள்ளார்.

Edit by Prasanth.K