திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:52 IST)

அமெரிக்காவில் கிரிக்கெட் லீக்: முக்கிய அணியை வாங்கிய சிஎஸ்கே நிர்வாகம்..!

அமெரிக்காவில் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அதில் உள்ள முக்கிய அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக அமெரிக்கன் கிரிக்கெட் லீக் என்ற தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் டெக்சாஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என அந்த அணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி நியூயார்க் அணியை வாங்கி இருப்பதாகவும், டெல்லி கேபிடல் அணி சியாட் அணியை வாங்கி இருப்பதாகவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லாஸ்ட் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
ஐபிஎல் போலவே அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அமெரிக்கன் கிரிக்கெட் லீக் போட்டிக்கு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran