இந்தியாவின் பீலடிங் குறித்து யுவராஜ் பரபரப்பு ட்வீட்

Last Modified வெள்ளி, 6 டிசம்பர் 2019 (21:23 IST)
இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங்கால் முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தனர்.
லீவீஸ் 40 ரன்களும், ஹெட்மயர் 56 ரன்களும், பொல்லார்டு 37 ரன்களும், கிங் 31 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹோல்டர் அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 208 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா தற்போது 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 8 ரன்களில் அவுட் ஆனபோதிலும், கே.எல்ராகுல் 38 ரன்கள் எடுத்தும், கேப்டன் விராத் கோஹ்லி 17 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறிதாவது: இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பீலடிங் மிகவும் மோசமானதாக இருந்தது, இளம் வீரர்கள் பந்தை சற்று தாமதமாக எதிர்வினையாற்றுகின்றனர்! என்று கூறியுள்ளார். பீல்டிங்கில் கோட்டை விட்டாலும் இந்தியாவின் பேட்டிங் மிகவும் பலமாக இருப்பதால் இந்த இமாலய இலக்கை அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :