புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (18:53 IST)

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு: இந்திய அணியில் இடம்பெற்ற வீர்ர்கள் யார் யார்?

மேற்கிந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இன்று ஐதராபாத் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெறுகிறது
 
இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். எனவே மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது
 
இதனை அடுத்து சற்று முன்னர் இரு அணி வீரர்களும் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இரு அணியிலும் இன்று இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரங்கள் பின்வருமாறு
 
இந்திய அணி:
 
ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவம் டுபெ, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், சாஹல்
 
மேற்கிந்திய தீவுகள் அணி:
 
லிவிஸ், சிம்மன்ஸ், பிராண்டன் கிங், ஹெட்மயர், பொல்லார்ட், டெனெஷ் ராம்தின், ஜேசன் ஹோல்டர், பியரி, வில்லியம்ஸ், ஷெல்டன், ஹெய்டன் வால்ஷ்,