வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (21:22 IST)

கோலி அந்த சாதனையை உடைப்பது கடினம்- முன்னாள் வீரர் கருத்து

virat kohli
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி முன்னணியில் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி  நட்சத்திர வீரராக திகழ்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் சூப்பர் பார்மில் இருந்த கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 50 சதங்கள் அடித்து சச்சின் சாதனை முறியடித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலி சமீபத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடித்ததற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அவர் 29 சதங்கள் அடித்துள்ளார். மேலும் அவர் சாதனைகள் படைப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்னும் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். 20 சதங்களை நிறைய வீரர்கள் தங்கள் வாழ்நாளில் கூட அடித்ததில்லை. விராட் கோலி  நிறைய சாதனைகளை முறியடித்தாலும், அவர் இன்னும் 100 சதங்கள் என்ற சாதனையை உடைப்பது கடினமாக இருக்கும் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா  தெரிவித்துள்ளார்,

சச்சின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில்  சதத்தில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.