வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:26 IST)

தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பலவேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.  அவரது தலைமையில் இருந்த அணி பல வெற்றிக்கோப்பைகளைப் பெற்றது. இந்நிலையில் அவர் சொந்த மண்ணில் நிகழ்த்திய சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று இந்தியா வென்றது. இதில் 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் திணறியது. பின்னர் 164 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. இதனல் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 21 வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளைப் பெற்ற முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்துள்ளார் கோலி. இதனால் கோலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி சதம் அடித்ததால் அவர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.