1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

ரொனால்டோ பாணியில் கோலா பாட்டில்களை எடுத்த வார்னர்!

ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மேஜை மீது இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்து கீழே வைத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ. அப்போது மேடை இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்த அவர் தான் தண்ணீர் மட்டுமே குடிப்பதாகவும்  கார்போனேட் தண்ணீர்களை குடிப்பதில்லை என்றும் கூறினார். இதனால் கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு பல நூறுக் கோடிகள் சரிந்தது.

இந்நிலையில் நேற்றும் இதுபோல ஒரு சம்பவம் நடந்தது. நேற்று சிறப்பாக விளையாடிய ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரும் அதே போல மேஜை மீதிருந்த கோலா பாட்டில்களை எடுத்து அப்புறப்படுத்தினார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த பாட்டில்களை மேஜை மீது வைத்தார். அப்போது ‘ரொனால்டோவுக்கு போதுமானதாக இருந்தால் எனக்கும் போதும்’ எனக் கூறினார்.