1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (09:24 IST)

ஆப்கானிஸ்தான் தோற்றாலும் சாதனை படைத்த ரஷீத் கான்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டி20-ல் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷீத் கான் படைத்தார். 

 
குருப் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
 
இதையடுத்து, பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அரை சதம் அடித்தார். அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் புது சாதனையை படைத்துள்ளார். 
 
ஆம், டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷீத் கான் படைத்தார். இவர் 53 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.