திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (11:20 IST)

காலுக்கு கீழ் உலக கோப்பை.. அதோட வேல்யூ தெரியுமா? – ஆஸ்திரேலிய வீரரை கண்டிக்கும் நெட்டிசன்கள்!

Mitchel Marsh
ஐசிசி உலக கோப்பையை ஆஸ்திரேலிய வீரர் தனது காலின் கீழ் வைத்து எடுத்த போட்டோ வைரலாகி பலரது கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.



நேற்று நடந்த ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி மிக சாதுர்யமாக விளையாடி ஆறாவது முறையாக உலக கோப்பையை தட்டி சென்றது. லீக் முதற்கொண்டு அனைத்து போட்டிகளில் தொடர் வெற்றியை பதிவு செய்த இந்தியா இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் வென்ற ஐசிசி உலக கோப்பையை வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் செய்யும் அலப்பறைகள் இந்திய ரசிகர்களை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. உலக கோப்பை மேல் கால் மேல் கால் போட்டு ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் போட்டோ எடுத்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பகிர்ந்து பல கிரிக்கெட் ரசிகர்களும் உலக கோப்பையை இவ்வாறு அவமதிப்பது தவறு என்றும், அதிக முறை உலக கோப்பை வென்ற மிதப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K