கடைசி ஓவரைவிட ஹிந்தி பேசுரதுதான் பிரஷரா இருந்துச்சு: விஜய் சங்கர் பேட்டி

VM| Last Modified புதன், 6 மார்ச் 2019 (18:13 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே  இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது.


 
இதில் முதலில் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 250 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார்.இதனால் இந்திய அணி கௌரவமான ஸ்கோரினை எட்டியது. இதையடுத்து  250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய  ஆஸ்திரேலியா அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
 
இதன்மூலம்  இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
 
இந்தப் போட்டியில் கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விஜய் சங்கரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.  
இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு, விஜய் சக்கரிடம் சக இந்திய வீரர் சாஹல் பேட்டி எடுத்தார். அதில்  உங்களுக்கு கடைசி ஓவர் வீசுய போது பிரஷரா, ஹிந்தி பேசுவது பிரஷரா என்று கேட்பார் அதற்கு விஜய் சங்கர் சிரித்துக் கொண்டே ஹிந்தியில் பேசுவதுதான் கொஞ்சம் பிரஷர்” என்று என்றார்.
 
மேலும் கடைசி ஓவர் குறித்து விஜய் சங்கர் , “ நான் தயராகவே இருந்தேன்.  நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அதை அப்படியே செயல்படுத்தினேன்” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :