1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2024 (08:42 IST)

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நேற்றோடு நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

ஆனால் இதே ஏலத்தில் ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்ட வீரர்கள் பலர் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அதில் சில வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு
  • ஜேம்ஸ் ஆண்டர்சன்
  • சர்பராஸ் கான்
  • பிரித்வி ஷா
  • ஸ்டீவ் ஸ்மித்
  • டேவிட் வார்னர்
  • ஜானி பேர்ஸ்டோ
  • கேன் வில்லியம்சன்
  • டேரில் மிட்செல்
  • ரிலே ரோஸோ
  • அல்ஸாரி ஜோசப்
  • ஜேஸன் ஹோல்டர்
  • டாம் லாதம்
  • டிம் சவுத்தீ
  • ஷகீப் அல் ஹசன்