செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (16:32 IST)

டி-20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற புதிய அணி..20 அணிகள் விவரம்!

டி-20  உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற  புதிய அணி..20 அணிகள் விவரம்!
டி-20  உலகக் கோப்பை தொடரில் விளையாட  முதன் முறையாக உகாண்டா  அணி தகுதி பெற்றுள்ளது.
 
மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்,  அயர்லாந்து, ஸ்காட்லாந்து,  பப்புவா  நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா என 19 நாடுகள் இதுவரை டி20  உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
 
மீதமுள்ள 1 இடத்திற்கு  உகாண்டா, ஜிம்பாவே, கென்யா ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாமது.

ஏற்கனவே  டி-20  உலகக் கோப்பை தொடரில் விளையாட நமீபியா அணி தகுதி பெற்ற நிலையில், Rwand அணிக்கு எதிராக நடைபெற்ற  தகுதிச் சுற்றுப் போட்டியில், உகாண்டா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இத்தொடருக்கு 20 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில்,  ஜிம்பாவே அணி வெளியேறியது. 

எனவே உகாண்டா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், மக்களும் பெரிதும் மகிழ்ச்சியடைந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.