தொடர்புடைய செய்திகள்
- 12 ஆண்டுகளில் தோனி கேப்டன்சி இல்லாத சி எஸ் கே … அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
- கேப்டனாக தோனி நிகழ்த்திய சாதனைகள் என்னென்ன??
- சிஎஸ்கே கேப்டன் ஜடேஜாவுக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!
- விசா பிரச்சனை முடிந்தது…. விரைவில் அணியுடன் இணையும் மொயின் அலி!
- ஒரு சகாப்தத்தின் முடிவு.. கண்ணீருடன் ட்ரெண்ட் செய்யும் தோனி ரசிகர்கள்!
உங்க சகாப்தத்திற்கு முடிவே கிடையாது தோனி! – ட்வெய்ன் ப்ராவோ ட்வீட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ள நிலையில் ட்வெய்ன் ப்ராவோ அவர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவரது தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 4 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் ஜடேஜா அணி கேப்டன் பதவியை வகிப்பார் என்றும் தோனி விளையாட்டு வீரராக மட்டும் பங்கேற்பார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோனியின் விலகல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வெய்ன் ப்ராவோ “எல்லாவற்றிற்கும் நன்றி தோனி. உங்கள் சகாப்தம் என்றுமே தொடரும். கேப்டன் பதவிக்கு ரவீந்திர ஜடேஜா சரியான தேர்வு. இது உங்களுக்கான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்