செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (08:47 IST)

கேப்டனாக தோனி நிகழ்த்திய சாதனைகள் என்னென்ன??

ஐபிஎல் தொடரின் முதல் சீசன் முதல் சிஎஸ்கே அணியை வழிநடத்தி வரும் தோனி ஒரு கேப்டனாக நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். 

 
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு முதல் ஜடேஜா அணி கேப்டன் பதவியை வகிப்பார் என்றும் தோனி விளையாட்டு வீரராக மட்டும் பங்கேற்பார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
ஐபிஎல் தொடரின் முதல் சீசன் முதல் சிஎஸ்கே அணியை வழிநடத்தி வரும் தோனி ஒரு கேப்டனாக நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். தோனி நிகழ்த்திய சாதனைகளின் தொகுப்பு இது... 
 
1. ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக ஒரு அணியை வழி நடத்திய ஒரே வீரர் தோனி. 
 
2. நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் அணியை வெற்றி பெறச் செய்த ஒரே கேப்டன். ஆம், 204 போட்டிகளில் கேப்டனாக விளையாடி 121 போட்டிகளில் வெற்றியை குவித்துள்ளார். 
 
3. அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்கள் பட்டியலில் 2வது இடத்தில் தோனி உள்ளார். 
 
4. ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக 4881 ரன்களை குவித்த விராட் கோலிக்கு அடுத்தபடியாக 2வது அதிக ரன்கள் குவித்த கேப்டன் தோனி ( 4,456).
 
5. ஐபிஎல் கேப்டனாக 150 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரரும் தோனி தான். 
 
6. அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறியதற்கும், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை அதாவது 9 முறை இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கே விளையாடியதற்கும் தோனி ஒரு முக்கிய காரணம்.