1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (20:55 IST)

ட்ராவிஸ் ஹெட் அதிரடி சதம்.. க்ளாசன் அரைசதம்! கலக்கத்தில் ஆர்சிபி!

Klaasen
ஐபிஎல் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதி வரும் நிலையில் சன்ரைசர்ஸ் பேட்டிங்கில் கலக்கி வருகிறது.ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் 277 ரன்களை அடித்து ஆர்சிபியின் 263 ரன்கள் சாதனையை முறியடித்த சன்ரைசர்ஸ் இன்று ஆர்சிபியையே அடிக்க களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்தும் ரன்களை கன்ண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அபிஷேக் சர்மாவை அவுட் செய்யவே 8வது ஓவர் வரை பயணிக்க வேண்டியிருந்தது.

இதற்கிடையே அதிரடி ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு 41 பந்துகளில் 102 ரன்களை குவித்துள்ளார். அவர் அவுட்டாகி சென்றாலும் க்ளாசன் அரைசதம் வீழ்த்தி தொடர்ந்து விளையாடி வருகிறார். உடன் எய்டன் மர்க்ரமும் நிதானமாக ஆடி வருகிறார்.

ஏற்கனவே 277 என்ற ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை செய்த சன்ரைசர்ஸ் இன்று தனது சாதனையை தானே முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த ரன்களை ஆர்சிபியால் சேஸ் செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K