திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (11:00 IST)

இன்று ஐதராபாத்தோடு மோதல்… ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியை தருமா ஆர் சி பி?

17 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளை விளையாடியுள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ ஆகிய நான்கு அணிகள் முன்னணியில் உள்ளன.

இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புகளோடு களமிறங்கியது ஆர் சி பி அணி. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக படுமோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் தோற்றுள்ளது.

இந்நிலையில் இன்று பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் வலுவாக செயல்பட்டு வரும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை தங்கள் சொந்த மைதானமான பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலாவது வெற்றி பெறுமா என்ற ஏக்கம் அந்த அணி ரசிகர்களுக்கு உள்ளது.