1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 11 மே 2024 (19:08 IST)

MI vs KKR… கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை… டாஸ் தாமதம்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 48 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்   ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று நடக்கும் 60 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

இந்நிலையில் அங்கு கனமழை பெய்து வருவதால் தற்போது டாஸ் போடுவது தாமதம் ஆகியுள்ளது. மழை பெய்து வருவதால் மைதானம் முழுவதும் படுதாக்களால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி தொடங்குவது மேலும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.