செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (15:38 IST)

ஒரு தடவை டக் அவுட் ஆனால் மோசமான பேட்ஸ்மேனா? – தினேஷ் கார்த்திக் கேள்வி!

நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் அதற்கு அவரே பதிலளித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வார்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளுமே இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நைட் ரைடஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நைட் ரைடர்ஸின் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் 62 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை கூட்டினார். நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் அரை சதமாவது வீழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு ரன் கூட அடிக்காமல் அவர் அவுட் ஆனது அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக் ”நேற்றைய ஆட்டத்தில் ஒரு இளம் வீரர் எந்த அளவுக்கு மன அழுத்தம் இன்றி விளையாட வேண்டுமோ அந்த அளவுக்கு சுப்மன் கில் விளையாடினார். இந்த தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளோம். அடுத்தடுத்து வெற்றிகளை பெற பயிற்சி பெற்று வருகிறோம்” என கூறியுள்ளார்.

மேலும் அவுட் ஆனது குறித்து பேசிய அவர் “ஒரு போட்டியில் டக் அவுட் ஆகி விடுவதால் அவர் மோசமான வீரர் என்று அர்த்தமாகுமா? ஒரு போட்டியில் ரன் எடுக்காதது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்