தொடர்புடைய செய்திகள்
- கடந்த ஆண்டு சிராஜை ரசிகர்கள் அதிகமாக திட்டினார்கள்… இப்போது ஆண்டு நிருபித்துவிட்டார்! கோலி புகழாரம்!
- இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை – முகமது சிராஜ் வேகத்தில் பணிந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்!
- பிளே ஆஃபுக்கு செல்வது மட்டும் இலக்கு அல்ல – டிவில்லியர்ஸின் ஆசை!
- கெய்லின் இரண்டு கால்களையும் கட்டிவிட வேண்டும் – அஸ்வின் பகிர்ந்த புகைப்படம்!
- 4 ஓவர், 2 மெய்டன், 8 ரன்கள், 3 விக்கெட்: ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!
தரவரிசையில் முன்னேற போவது யார்? ராஜஸ்தான் – ஹைதராபாத் பலப்பரீட்சை!
ஐபிஎல் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் இன்று சன்ரைஸர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.
இதுவரை இந்த சீசனில் 10 போட்டிகள் ஆடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 4 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 9 போட்டிகள் விளையாடி 3 வெற்றியும் 6 தோல்வியும் அடைந்துள்ளது.
முன்னதாக முதல் சுற்றில் இரு அணிகளும் மோதிக்கொண்ட போது 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் முதல் சுற்றின் தோல்விக்கு சன் ரைஸர்ஸ் பதிலடி தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றால் கூடுதலாக இரண்டு புள்ளிகளை பெற்று 5வது இடத்திற்கு செல்லும். சன் ரைஸர்ஸ் அணி இதில் வெற்றி பெற்றால் 7வது இடத்தில் நீடிக்கவோ, 6வது இடத்திற்கு முன்னேறவோ வாய்ப்புகள் உள்ளது.
அடுத்த கட்டுரையில்