இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை – முகமது சிராஜ் வேகத்தில் பணிந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்தார்.
அனைவரும் அதிசயப்படும் வகையில் உள்ளது இந்த ஆண்டு ஆர்சிபி வீரர்களின் ஆட்டம். புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்த்தில் உள்ள ஆர்சிபி பிளே ஆஃப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தான் வீசிய நான்கு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அதிலும் தனது முதல் இரண்டு ஓவர்களுமே விக்கெட்களையும் எடுத்தும் ரன்கள் கொடுக்காமல் மெய்டனும் செய்தார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை யாருமே நிகழ்த்தாத சாதனையாகும்.