செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (10:52 IST)

பிளே ஆஃபுக்கு செல்வது மட்டும் இலக்கு அல்ல – டிவில்லியர்ஸின் ஆசை!

ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் செல்வது மட்டுமே இலக்கு அல்ல என்று தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் நடந்துவரும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. நேற்று கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் அந்த அணியை 84 ரன்களில் சுருட்டி எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் எளிதாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் ‘பிளே ஆஃப்க்கு செல்வது மட்டுமே எங்கள் இலக்கல்ல. அதற்கும் மேலே செல்ல வேண்டும். புள்ளிப்பட்டியலில் உச்சத்தை தொடும் தகுதி எங்கள் அணிக்கு உள்ளது. இதை நான் என் அணியினருக்கு தெரிவிக்க விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.