1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (08:10 IST)

4 ஓவர், 2 மெய்டன், 8 ரன்கள், 3 விக்கெட்: ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

4 ஓவர், 2 மெய்டன், 8 ரன்கள், 3 விக்கெட்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணியின் சிராஜ் 2 ஓவர்கள் மெய்டன் ஓவர்களாக வீசினார் என்பதும் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதற்கு முன் தொடர்ச்சியாக இரண்டு ஓவர்கள் மெய்டன் ஓவர்களாக யாரும் வீசவில்லை என்பதால் இதுவொரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் சிராஜ் இதற்கு முன் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த்யுள்ளார் என்பதும் ஆனால் நேற்று மட்டும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியில் சிராஜ் நான்கு ஓவர்கள் பந்துவீசி அதில் இரண்டு ஓவர்கள் மெய்டனாக வீசி வெறும் எட்டே ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சில் ஒன்றாக இது கருதப்படுகிறது. திரிபாதி, ரானா மற்றும் பாண்டன் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுக்களை சிராஜ் வீழ்த்தியதால் நேற்று கொல்கத்தா அணி வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பதும் இந்த ஐபிஎல் தொடரில் இதுதான் மிகக்குறைந்த ஸ்கோர் என்பதும் குறிப்பிடத்தக்கது