5 சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

Rohit Sharma
Last Updated: வியாழன், 15 மார்ச் 2018 (13:56 IST)
நேற்று வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர் விளாசியதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 
இலங்கையில் வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பொட்டியில் வங்காளதேசம் - இந்தியா ஆகிய அணிகள் மோதின. இந்திய அணி 17 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 
இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று அதிரடியாக ஆடி 89 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 4 ஃபோர் ஆகியவை அடங்கும். இதன்மூலம் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
இதற்கு இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் 74 சிக்ஸருடன் முதலிடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர் அடித்ததன் மூலம் 75 சிக்ஸர்களுடன் முதலிடத்திற்கு சென்றார். சுரேஷ் ரெய்னா 54 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :