சச்சின் பரிந்துரை மட்டும் காரணமில்லை… தோனி கேப்டன் ஆகக் காரணம் இவைதான் – திலீப் வெங்சர்கார் தகவல்!
இந்திய அணிக்கு டி 20 உலகக்கோப்பை தொடர் 2007-ல் மகேந்திர சிங் தோனி தலைமையேற்று வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வெல்லவைத்தார். அதன் பின்னர் அவர் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக்கப்பட்டு பின்னர் டெஸ்ட் அணிக்கும் கேப்டனானார்.
இந்நிலையில் தோனியைக் கேபடனாக்கியதற்கு சச்சினின் பரிந்துரையும் முக்கியக் காரணம் என பலமுறை சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதுமட்டுமில்லை காரணம் இல்லை என அப்போதைய தேர்வுக்குழு தலைவர் திலில் வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இதுபற்றி பேசிய அவர் “ ஒரு வீரரின் கிரிக்கெட் புத்திசாலித்தனம், உடல் மொழி, அணியை முன்னணியில் இருந்து வழிநடத்தும் திறன் மற்றும் மனித நிர்வாகத் திறன் ஆகியவை எப்போதும் கவனிக்கப்படும். தோனி ஆட்டத்தை அணுகும் விதம், உடல் மொழி, மற்றவர்களிடம் எப்படிப் பேசினார் என்பதை பார்த்தோம்; எங்களுக்கு நேர்மறையான கருத்து கிடைத்தது. அதனால் அவரைக் கேப்டன் ஆக்கினோம்.” என வெங்சர்க்கார் கூறியுள்ளார்.