1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. CSK CEO kasi viswanathan talked about Dhoni health

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தோனியின் உடல்நிலை எப்படி உள்ளது?… சிஎஸ்கே CEO தகவல்!

சிஎஸ்கே
ஐபிஎல் -2023, 16 வது சீசன் இறுதிப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு ஓடுவதற்கு சிரமப்பட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி, ஐபிஎல் கோப்பை முடிந்ததும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

சிகிச்சைக்குப் பிறகு சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று இப்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

அதில் “தோனியிடம் இந்த சீசனில் விளையாட முடியுமா என நாங்கள் கேட்கவில்லை. அவரால் விளையாட முடியவில்லை என்றால் எங்களிடம் நேரடியாக சொல்லி இருப்பார். இறுதிப்போட்டி வரை அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. அதற்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகிறேன் எனக் கூறினார். இப்போது அவர் உடல் நிலை வேகமாக குணமாகி வருகிறது.  சில வார ஓய்வுக்குப் பிறகு அவர் பயிற்சியில் ஈடுபடுவார்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லை அணியை வீழ்த்தியது திருப்பூர்..!