1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Wiaan murder made a mistake said gayle

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

வியான் முல்டர்
தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் வியான் முல்டர் முச்சதம் அடித்துக் கலக்கியுள்ளார். முதல் இன்னிங்ஸில் பேட் செய்த அவர் 334 பந்துகளில் 367 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்களான லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிக்ளேர் செய்து அதிர்ச்சியைக் கொடுத்தார்.

இதுபற்றி பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளித்த அவர் “நாங்கள் போதுமான ரன்களை சேர்த்துவிட்டதாக நினைத்தோம். பிரையன் லாரா ஒரு லெஜண்ட் வீரர். அதனால் அதுவே உண்மையான சாதனையாக இருக்கட்டும். எனக்கு இன்னொரு முறை அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் கூட நான் இந்த முடிவையே மீண்டும் எடுப்பேன். லெஜண்ட்களே அதுபோல பெரிய ஸ்கோர்களை பெற்றிருக்க வேண்டும்” என தன்னடகத்துடன் பேசியிருந்தார்.

இந்நிலையில் முல்டரின் முடிவு தவறானது என கிறிஸ் கெயல் பேசியுள்ளார். அதில் “வாழ்நாளில் எப்போதாவதுதான் இது போன்ற வாய்ப்புகள் வரும். அதனால் டிக்ளேர் செய்தது அணியின் தவறு” என விமர்சித்துள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!