1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (21:35 IST)

தோனியின் ''எல்ஜிஎம்'' பட முதல் சிங்கில் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

LGM
எம்.எஸ் தோனி தயாரிப்பில் ஹரீஸ் கல்யாண் இவானா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின்   முதல் சிங்கில் இன்று வெளியாகியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி  சமீபத்தில் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற  திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்

ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள  இப்படத்திற்கு  எல்ஜிஎம் (LetsGetMarried) என்ற டைட்டில் வைக்கப்பட்டது.

இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர்   சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இது இணையதளத்தில் வைரலானது.

இந்த நிலையில், , லெட்ஸ் ஜெட் மேரிட் படத்தின் முதல் சிங்கில்  #Salana பாடலை இன்று படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இப்பாடல்  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ள நிலையில், மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஆதித்யா பாடியுள்ளார்.