ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:59 IST)

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் யார் யாருக்கு ஓய்வு?

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மொஹாலியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றுள்ள நிலையில் நேற்று இந்தூரில் நடந்த இரண்டாவது போட்டியையும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் அடுத்து நடக்கவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் அணிக்குள் இணைய உள்ளனர். இதனால் ஷுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பென்ச்சில் உட்காரவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

மேலும் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத அக்ஸர் படேல் மூன்றாவது போட்டியிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.