வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (14:55 IST)

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: தங்கம் வென்றது இந்திய அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய நிலையில் இந்திய  மகளிர் அணி வெற்றி பெற்று தங்கம் வென்று உள்ளது. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி  20 ஓவர்களில்  ஏழு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. 
 
இந்த நிலையில் 117 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை மகளிர் அணி விளையாடி நிலையில் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இதனை அடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தங்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran