வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (20:16 IST)

விஜய்யின் ''நா ரெடிதான் வரவா'' பாடலுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் டான்ஸ்..வைரல் வீடியோ

shikhar dawan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார்

இப்படத்தின் முதல் சிங்கில்  ''நா ரெடி'' என்ற பாடல்    நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். வைசாக் பாடல் எழுதியிருந்தார்.  இப்பாடல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

இப்பாடலை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சடத்திரங்கள் உள்ளிட்ட பலரும் ரீல்ஸிலும் சமூக வலைதளங்களில் டான்ஸ் ஆடி, வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் விஜய்யின் நா ரெடிதான் வரவா என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.