திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (21:10 IST)

பெண்கள் மீதான வன்முறை: '' இது மாநிலத்திற்கு தலைகுனிவு''- மணிப்பூர் முதல்வர்

N.Biren Singh
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை   நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற  வீடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இதற்கு கருத்துகள் கூறி வருகின்றனர்.

இந்த இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தில் முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை மணிப்பூர் மாநில போலீஸார் வெளியிட்டனர்.

இந்த நிலையில் குற்றவாளியின் வீட்டை அந்த பகுதியில் உள்ள சொந்த கிராமத்து மக்களே அடித்து நொறுக்கியதாக தகவல் வெளியாகிறது.

இந்த  நிலையில், மணிப்பூர் மக்கள் பெண்களை தாயாக மதிப்பவர்கள் இந்த சம்பவம்  மாநிலத்திற்கு தலைகுனிவு என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘’இந்தச் சம்பவம் மாநிலத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால்  மாநில தழுவிய கண்டன போராட்டம்   நடத்தவிருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.