திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (21:35 IST)

கள்ளத் தொடர்பு ....கணவனை வெட்டிக் கொன்று ஆற்றுக் கால்வாயில் வீசிய மனைவி...

utterpradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் தன் கணவனை கோடாரியால் வெட்டி   5 துண்டுகளாக ஆற்றில் வீசிய மனைவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கஜ்ரல்லா பகுதியைச் சேர்ந்தவர் ராம்பால். இவரது மனைவி துலாரோ தேவி. இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், துலாரோ தேவிக்கும், ராம்பாலின் நண்பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருகும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, துலரோதேவி  கணவரின் நண்பருடன் வாழத்தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன் கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர், இருவரும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த துலாரோதேவி கணவரை கட்டிவைத்து கோடாரியால் வெட்டிக் கொன்றார்.