திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (20:56 IST)

பெண்ணின் சடலத்திலிருந்து உடல் உறுப்புகள் அகற்றம்! அதிர்ச்சி சம்பவம்

Death
உத்தர பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில்   உள்ள ரசூலா கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா( 20 வயது).  இவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில், கணவர் வீட்டார் இவரை கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் போலீஸில் தெரிவித்தனர்.

எனவே பெண்ணின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக புடானில்  உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர், அப்பெண்ணின் சடலத்தில் இருந்து கண்கள் அகற்றப்பட்டதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடல் உறுப்புகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மீண்டும் பிரேத  பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.