ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் மெஷினை திருடிய மர்ம நபர்கள்
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பணமிருந்த ஏடிஎம் மெஷினை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் ககரோல் பஸ் ஸ்டாண்டு அருகில் எஸ்பியை ஏடிம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்று அதிலாகை 2.45 மணிக்கு சில மர்ம நபர்கள் இப்பகுதிக்கு வந்து ஏடிஎம் மெஷினை திருடி சென்றுள்ளனர்.
ஏடிஎம்-ல் இருந்து சத்தம் கேட்கவே வங்கிக் கிளை அருகில் இருந்த வீட்டினர் பக்கத்தில் இருப்போரிடம் உதவிகேட்டுள்ளனர்.
அப்போது, திருடர்கள் ஏடிஎம் மெஷினை தூக்கிவிட்டு வேனில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருட்டு போன வங்கி ஏடிஎம் மெஷினில் ரூ.30 லட்சம் பணமிருந்தது குறிப்பிடத்தக்கது.