செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:27 IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதலா?

India Pakistan
கடந்த சில நாட்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா நான்கு புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளன. வங்கதேசம் இன்னும் ஒரு புள்ளியை கூட பெறவில்லை. 
 
இந்த நிலையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே சம நிலையில் இருந்தாலும் பாகிஸ்தான் அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது 
 
எனவே இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றால் இறுதிப் போட்டி இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறும் என்பதும் அந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva