ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (07:23 IST)

இலங்கை அணியிடம் இந்தியா பரிதாப தோல்வி.. சொதப்பிய முக்கிய பேட்ஸ்மேன்கள்..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இடம் இந்தியா பரிதாப தோல்வி அடைந்தது. முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமான தொடக்கத்தை கொடுத்தார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து சுப்மன் கில் 35 ரன்கள், அக்சர் பட்டேல்  44 ரன்கள் அடித்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக விராட் கோலி, ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பியதால்  இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்த நிலையில் நேற்றைய வெற்றியால் இலங்கை அணி 1-0  என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மட்டும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva