1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T-20 match West Indies batting action Will the Indian team win

டி-20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி பேட்டிங்.... ஜெயிக்குமா இந்திய அணி ?

india -wesindies test
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  கடந்த 3ஆம் தேதி நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
.
இந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையிலான  3 வது T -20 போட்டி நடைபெற்று வருகிறது.  இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இப்போட்டியில் கிங் 42 ரன்னும், மேயர்ஸ் 25 ரன்னும், சார்லஸ் 12 ரன்னும் அடித்து அவுட்டாகினர். தற்போது போரான் 20 ரன்னும், பவல் 1 ரன்னுடம் விளையாடி வருகின்றனர்.

இதுவரை 14.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி சார்பில்,  யாதவ் 3 விக்கெட்டும், சாஹல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்த கட்டுரையில்
ஆசிய கோப்பை கிரிக்கெட்,. அட்டவணை வெளியீடு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது?