1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (07:38 IST)

எனக்கு ஏன் வலிக்க வேண்டும்?... சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து சூர்யகுமார்!

பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த தொடரில் இந்திய அணியின் டி 20 கேப்டனான சூர்யகுமார் யாதவ்வுக்கும் இடம் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக 50 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் அந்த தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை. அதனால் அதன் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சூர்யகுமார் “எனக்கு ஏன் அது வலிக்க வேண்டும்? நான் சரியாக விளையாடி இருந்தால் எனக்கு இடம் கிடைத்திருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில்  அணிக்கு தகுதியான ஒருவருக்குதான் இடம் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.