ஏன் ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு?... அதிருப்தியை வெளியிட்ட ஸ்ரீகாந்த்!
பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த தொடருகான துணை கேப்டனை நியமிப்பதில் ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கம்பீர் ஹர்திக் பாண்ட்யாவை துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் அகார்கர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சுப்மன் கில்தான் வேண்டும் எனக் கூறி அவரை நியமித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஷுப்மன் கில் நியமனம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் “ஷுப்மன் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அணியில் பும்ரா இருக்கும் போது அவருக்குதான் அந்த பொறுப்பை வழங்கியிருக்க வேண்டும். இதுப் பைத்தியக்காரத்தனமான முடிவாக தெரிகிறது. சஞ்சு சாம்சனை ஏன் அணியில் எடுக்கவே மாட்டேன் என்கிறார்கள் எனப் புரியவில்லை.” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.