வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (07:56 IST)

இதே டெம்ப்ளேட்டில்தான் இனி எங்கள் ஆட்டம் இருக்கும்- சூர்யகுமார் யாதவ்!

நேற்று நடந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20  போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. பெரேரா அபாரமாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளையும் மற்றும் ஹர்திக், சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து  இந்தியா பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போது திடீரென மழை பெய்ததால் 8 ஓவர்களில் 78 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, கேப்டன் சூர்யா குமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி 6.3 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் “இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே நாங்கள் சொன்னதுதான், என்ன மாதிரியான ஆட்டத்தை டி 20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பதுதான் எங்களுக்குள் பேசுபொருளாக இருந்தது. இதே டெம்ப்ளேட்டில்தான் அடுத்து வரும் போட்டிகளிலும் விளையாடுவோம். அடுத்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்” எனக் கூறியுள்ளார்.