ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:02 IST)

எங்க அணியப் பத்தி நீங்க ஒரு விஷயத்த நீங்க தெரிஞ்சிக்கணும்… ஹாட்ரிக் தோல்விக்கு பின் பாண்ட்யாவின் பதிவு!

இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளையும் தோற்றுள்ளது புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் அந்த அணி நிர்வாகத்தின் மேலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மேலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நேற்று தங்கள் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் எளிதாக அந்த இலக்கை எட்டியது ராஜஸ்தான்.

இந்த தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய அழுத்தம் உருவாகியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாண்ட்யா “எங்கள் அணியை பற்றி நீங்கள் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ‘ நாங்கள் எப்போதும் அணியைக் கைவிடுவதில்லை. நாங்கள் தொடர்ந்து சண்டையிடுவோம். தொடர்ந்து முன்னோக்கி செல்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.