1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suryakumar yadav becomes no 1 t 20 batsmen

டி 20 தரவரிசையில் சூர்யகுமார் முதலிடம்… கோலி பல இடங்கள் முன்னேற்றம்!

சூர்யகுமார் யாதவ்
சமீபகாலமாக டி 20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் கடந்த ஒரு ஆண்டாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 170க்கும் மேல் உள்ளது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடி வரும் அவர் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 862 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் இருந்த முகமது ரிஸ்வான் 842 புள்ளிகளோடு இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் கோலி பல இடங்கள் முன்னேற்றம் கண்டு 10 ஆவது இடத்தில் இருக்கிறார். 
அடுத்த கட்டுரையில்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் கொடுத்த இமாலய இலக்கு!