திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (09:30 IST)

பும்ரா விஷயத்தில் மீண்டும் தவறு செய்ய விரும்பவில்லை… தேர்வுக்குழு தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் பூம்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

ஆசியக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டார். அதனால் மீண்டும் காயமாகி அவர் இப்ப்போது உலகக்கோப்பை தொடரை இழந்துள்ளார்.

அடுத்து நியுசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக நடக்கும் போட்டித் தொடர்களிலும் அவர் பெயர் இல்லை. இந்நிலையில் பூம்ராவின் உடல்நிலைக் குறித்து பேசியுள்ள தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா “அவரை நாங்கள் அவசரப்படுத்த விரும்பவில்லை. முன்னர் அவரை அவசரப்படுத்தியதால் நடந்ததை நீங்கள் பார்த்தீர்கள். அவரை எங்களின் மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.