செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (08:50 IST)

ஐபிஎல்லில் ரிட்டயர்டு ஆயிடுவேன்.. ஆனா!? – ரெய்னாவிடம் ரகசியமாக சொன்ன தோனி!

Dhoni Raina
ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே அணி கேப்டனாக தொடர்ந்து வரும் தோனி தனது ஓய்வு குறித்து ரெய்னாவிடம் கூறிய தகவல் வைரலாகியுள்ளது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வளவு பரபரப்புகளுக்கு நடுவேயும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கேள்வி ‘தல தோனிக்கு இதுதான் கடைசி சீசனா?’ என்பதுதான். வான்கடே, சின்னசாமி ஸ்டேடியம், ஈடன் கார்டன் என தோனி செல்லும் இடமெல்லாம் மஞ்சள் படை அணி வகுக்கிறது.

“எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ” என எதிர் அணி ரசிகர்கள் கூட தோனி களத்தில் இறங்கிவிட்டால் தோனி ரசிகர்களாகி விடுகிறார்கள். ஆனால் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என்றும், அதனால் சென்னை அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் தோனி தீவிரமாக இருக்கிறார் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது. இது ரசிகர்களை தொடர்ந்து பரபரப்பிலேயே வைத்துள்ளது.

இந்நிலையில் ஓய்வு குறித்து தன்னிடம் தோனி சொன்னதை ரெய்னா பகிர்ந்துள்ளார். அதில் அவர் ”ஐபிஎல் கோப்பையை வென்று விட்டாலும் கூட மேலும் ஓராண்டு தொடர்ந்து விளையாடுவேன் என தோனி என்னிடம் சொன்னார்” என கூறியுள்ளார். அந்த வகையில் இது தோனிக்கு கடைசி ஐபிஎல் கிடையாது என்ற மட்டில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edit by Prasanth.K