1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suresh raina wants to play rishab pant over dinesh karthik

தினேஷ் கார்த்திக்கை விட பண்ட்டை ஆடவைப்பதுதான் சிறந்தது… சுரேஷ் ரெய்னா சொல்லும் காரணம்!

பாகிஸ்தான்
இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்களே இல்லாத நிலை இப்போது நிலவுகிறது.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆடும் லெவனில் ஆறாவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்பதுதான் இந்திய அணியில் கேள்விக்குறியாக உள்ளது. இதற்காக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே போட்டி நிலவுகிறது. இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “இந்திய அணியில் முதல் 5 பேட்ஸ்மேன்களில் இடது கை ஆட்டக்காரரே இல்லை. அதனால் பண்ட் அணியில் இருந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பை டி20: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!